- நெல்லை மாவட்டம் புதன்கிழமை தோறும் நடக்கும் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு மாற்றம்.
- முகூர்த்தம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் காரணமாய் செவ்வாய் கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பி எம் சரவணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்கள் தங்களின் குறைகளை தீர்க்கக் கோரி மனு கொடுக்க, அதை ஏற்றுக்கொண்டு பரிசீலித்து பல சலுகைகள் அரசாங்கம் இன்று வரை செவ்வனே செய்து வருகிறது.
இதில் முக்கியமாக வாரம்தோறும் புதன்கிழமை என ஒருநாள் அமைத்து, மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அதில் நடைபெற்று, மக்களும் தங்களுடைய குறை தீர்வதற்கான மனுக்களை
அளித்து வந்தனர்.
அதுபோல் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. ஏவிஎம் சரவணன் தலைமை தாங்கி , பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி நகர்நல அலுவலர் ராஜேந்திரன் , உதவி ஆணையாளர்கள் ஐயப்பன் ,ஜஹாங்கீர் பாட்சா , லெனின் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் பி எம் சரவணன் பேசியதாவது
புதன்கிழமை முகூர்த்தம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளின் காரணமாக குறை தீர்க்கும் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை அன்று மாற்ற வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை ஏற்று அடுத்த வாரம் முதல் செவ்வாய்க்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என மேயர் பி எம் சரவணன் கூறினார்.