செய்தி குறிப்புகள் :
- நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே சுய தொழில் புரிவதற்கான கருத்தரங்கம்
- 11ஆம் தேதி நடக்கவிருக்கும் இந்த கருத்தரங்கில் சிறு தொழில் தொடங்குவோர் பயன்பெறலாம்
வாழ்க்கையில் சோதனைகள் பல வரலாம் . அனைத்து சோதனைகளும் சாதனைகளாக மாற்றுவதற்கான சுய தொழில் புரிவதற்கான கருத்தரங்கம் மக்களின் நலன் கருதி அரசு ஏற்பாடு செய்துள்ளது.
திருநெல்வேலி நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
என்னுடைய ஏற்பாட்டில் சுயதொழில் புரிவோர்க்கான கருத்தரங்கம் நாங்குநேரி அருகே சுய தொழில் புரிவதற்கான கருத்தரங்கம் 11ஆம் தேதி நடக்கிறது.
இடம்; நாங்குநேரி களக்காடு சாலையில் கடம்போடுவாழ்வு கிராமத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானம்
நேரம் ; காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை ஐந்து முப்பது மணி வரை நடைபெறும்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த சுயதொழில் செய்வோர் தொழில் செய்ய விரும்புவோர் விவசாயம் மற்றும் கால்நடை தொழில்களில் ஈடுபட விரும்புவோர் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறலாம்
ரூபி மனோகரன் இன் சாரிடபிள் டிரஸ்ட், செயின்ட் ஜோசப் கல்வியியல் கல்லூரி, மாவட்ட சிறுகுறு கிராமிய தொழில்கள் சங்கம், தமிழ்நாடு சிறு குறு தொழில் முனைவோர் சங்கம் நெல்லை கிளை உதவியோடு மாவட்ட தொழில் மையம் எம். எஸ். எம். இ. வளர்ச்சி நிறுவனம் மற்றும் வங்கிகள் ஆதரவுடன் இந்த கருத்தரங்கம் நடைபெறுகிறது
சுய தொழில் தொடங்க கடன் உதவி பெற விரும்புவோர் தங்கள் புகைப்படம் மற்றும் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் தொழில் திட்டங்களுடன் அன்றைய தினமே விண்ணப்பத்தை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கலாம்
நடைபெறும் நாள் அன்று காலை 8 மணிக்கு நாங்குநேரி மற்றும் கலக்காடு பஸ் நிலையங்களில் இருந்து இலவச பஸ் வசதிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
வாழ்வில் முன்னேற எவ்வளவோ முயற்சி செய்கிறோம். முடிவு இறைவனிடம்.. கவலை நமக்கு எதற்கு! வெற்றி வந்தால் இனிது தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றிக்கு முதல் படியே.. வாழ்வதற்கு பல வழிகள் வையகத்தில் உண்டு என்பதை நினைவில் கொண்டு இப்படிப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் நிறைவான மகிழ்ச்சி பெரும் வாழ்க்கையாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று திருநெல்வேலி டுடே வாழ்த்து தெரிவிக்கின்றது.