உலகம் முழுவதும் தற்போது மீண்டும் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க பல்வேறு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொங்கல் விடுமுறை தினங்களில் (14,15,16/01/2022) குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் இன்றி குற்றாலம் அருவி பகுதிகள், சுவாமி சந்நதி பஜார் உள்ளிட்ட அனைத்து இடங்களும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்நிலையில் இன்று முதலாவது குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் உள்ளனர்.