கொரோனா பெருந்தொற்று மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நேற்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர் நகரம், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, தாயில்பட்டி, ராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, ஆலங்குளம், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை, திருச்சுழி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் அடைக்கப்பட்ட நிலையில், முக்கிய வீதிகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டதுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.