செய்தி குறிப்புகள் :
- நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெயர் மாற்றம் மற்றும் பெயர் வைப்பதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும் திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் அறிவிப்பு
- சொத்துக்களுக்கும் பெயர் மாற்ற அரசியல் அனுமதி பெற வேண்டும் எனவும் அறிவிப்பு
திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகம் அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது அதில் திருநெல்வேலி அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி களுக்கு பெயர் மாற்றம் மற்றும் பெயர் வைப்பதற்கு அரசுடைய அனுமதி பெற வேண்டும் .
சென்னை தலைமை செயலக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் சிவதாஸ் மீனா கூறுதலின்படி தமிழ்நாடு மாவட்ட நகராட்சியில் சட்டம் 1920 ல் பிரிவு 189 மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி சட்டம் 1981ன் பிரிவு 266 ஆகியவற்றில் அரசின் அனுமதி பெற்ற பின்னரே மன்றங்கள் மற்றும் மாமன்றங்கள் அனைத்து நகராட்சி சொத்துகளுக்கு பெயரிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பட்ட சட்டப்பிரிவுகளுக்கு உட்பட்டு மாநகராட்சி நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு சொந்தமான சாலைகள் தெருக்கள் , கட்டடங்கள் பூங்கா விளையாட்டு இடங்கள் , பேருந்து நிலையங்கள் முதலியவற்றிற்கு பெயர் வைப்பது அல்லது பெயர் மாற்றுவது தொடர்பான முன்மொழிவுகள் நகராட்சி நிர்வாக இயக்குனர் பேரூராட்சியின் ஆணையாளர் வழியாக அரசிற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
அரசின் அனுமதி பெற்ற பின்னரே இது பெயரிடுவது மற்றும் பெயர் மாற்றம் குறித்த தீர்மானங்கள் சம்பந்தப்பட்ட மாமன்றங்களின் ஒப்புதலுக்கு வைக்கப்படுதல் வேண்டும் எனவும் மாநகராட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது.