- மார்ச்-24 உலக காச நோய் தினம்
- காச நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் மார்ச-24் ஆம் தேதியான நேற்று உலக காசநோய் தின விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தை பத்தமடை வட்டார மருத்துவ அலுவலர் திரு.சரவணபிரகாஷ் அவர்கள் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
இந்த கருத்தரங்கில் பத்தமடை சுகாதார ஆய்வாளர் திரு.முருகன் அவர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திரு. ஜான் ஆண்டணி அருள்தாஸ் அவர்கள், சுகாதார மேற்பார்வையாளர் திரு.செய்யது சுலைமான் அவர்கள் ஆகியோர் காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் காசநோய் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
Image source: dailythanthi.com