Logo of Tirunelveli Today

திருநெல்வேலி பகுதிகளில் நாளை மின்தடை!

March 25, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
  • நாளை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருநெல்வேலி மாநகரில் உள்ள பாளையங்கோட்டை மற்றும் மேலப்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (26/03/2022) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என நெல்லை நகர்ப்புற செயற்பொறியாளர் திரு.முத்துக்குட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலகுளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகர், நீதிமன்றம் பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பேருந்து நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்புநகர், முருகன்குறிச்சி, மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலகருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம்.

அன்னைநகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான் குளம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகர், அன்புநகர், திருமால்நகர், திருநகர், மகிழ்ச்சிநகர், அரசு அலுவலர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடைமிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி.

Image source: Facebook.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify