செய்திக் குறிப்புகள் :
- நெல்லை மாவட்டத்தில் விகேபுரம் நூலகத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது
- உலகத் தமிழ் மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவர் மருத்துவர் மைக்கேல் செயராசு சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
நம் அறிவுக் கண்ணை திறந்து சூரிய ஒளியை கொடுப்பது நூலகம் . சூரிய ஆற்றல் எனும் பலம் , பவர் அனைத்தும் நாம் பெற்றால் வாழ்க்கையில் வெற்றி நிர்ணயம் நிச்சயம் உண்டு எனும் பெருமையை அனைவரும் அறியவேண்டும் எனும் விதத்தில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதையொட்டி விக்ரமசிங்கபுரம் அரசு கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் உலக சுற்றுப்புற சூழல் தின விழா நடைபெற்றது . வாசகர் வட்ட துணைத் தலைவர் மைதீன் பிச்சை தலைமை வகிக்க ... கிளை நூலகர் சுசிலா, வாசகர் வட்ட உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள் கலையரசு மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
விக்ரம சிங்கப்புரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன் வேல் ராஜன் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசினர் . சிறப்பு விருந்தினராக உலக தமிழ் மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவர் மருத்துவர் மைக்கேல் செயராசு கலந்து கொண்டு உரையாற்றினார் .
பள்ளி மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு பற்றிய ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன .
கற்ப அவிழ்தம் மருத்துவ மாத இதழ் மற்றும் மூலிகை செடி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கப்பட்டது. நூலக உதவியாளர் கைலாசம் நன்றி கூறினார்.