செய்திக் குறிப்புகள் :
- நேற்று ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையானுக்கு நெல்லை மாவட்ட பக்தர்களால் 10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது
- தேவஸ்தான வரலாற்றில் முதன்முறையாக நிகழ்ந்த சம்பவம் இது தேவஸ்தான நிர்வாக அதிகாரி அறிவிப்பு.
இருப்பவன் இல்லாதவன் எனும் நிலை இறைவனிடத்தில் உண்டோ! எனும் நிலை அறிந்த நாம், இறைவனிடத்தில் மனதை மட்டுமே வைக்கிறோம். அவன் நினைத்தால் மட்டுமே மகிழ்ச்சியை கொடுக்க முடியும் என்பதை உணர்ந்த நாம் , பொருளையும் அவன் வசம் கொடுக்கவும் செய்கின்றோம் …. என்பது திருப்பதியில் மட்டுமே அதிக அளவில் நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாகும்.
இந்தியாவில் ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் வெளிமாநிலங்களில் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
பணக்கார கடவுள் என அழைக்கப்படும் திருப்பதி ஏழுமலையானுக்கு தினமும் சராசரியாக நான்கு கோடி வரை உண்டியல் மூலம் காணிக்கை செலுத்தப்படுகிறது ஆண்டுக்கு உண்டியல் வருவாய் 1500 கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தங்கம், வைர நகைகள், வெள்ளி பொருட்கள் பத்திரங்கள் தவிர மேலும் உண்டியல் மூலம் ஆன்லைனிலும் பக்தர்கள் தினமும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தி வருகின்றனர் .
மேலும் திருநெல்வேலியை சேர்ந்த ஏ - ஸ்டார் டெஸ்டிங் அண்ட் இன்ஸ்பெஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தேவஸ்தானம் வித்யா திட்டத்திற்கு ஒரு கோடி பாலகிருஷ்ணா பெட்ரோல் பங்க் சார்பில் கோவில் கட்டும் திட்டத்திற்கு ஒரு கோடி என ஸீ- ஹப் இன்ஸ்பெக்ஷன் சர்வீசஸ் சார்பில் வெங்கடேஸ்வரா பாரம்பரிய அறக்கட்டளைக்கு ஒரு கோடி என மொத்தம் 10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.
இந்நிலையில் திருநெல்வேலியை சேர்ந்த தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன் என்பவர் திருமலை தேவஸ்தானத்தின் பிரதான திட்டம் கோ சம்ரக் ஷன திட்டம், தேவஸ்தான எலும்பு சிகிச்சை மருத்துவமனை , அறக்கட்டளை, அன்ன பிரசாத திட்டம், சர்வ ஸ்ரேயாஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் ஆகிய ஏழு திட்டங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் ஏழு கோடி நன்கொடை வழங்கினார்.
திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் 10 கோடி நன்கொடை பெறப்பட்டது இதுவே முதல்முறை என்று மகிழ்ச்சி தெரிவித்தார்