- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
- கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் பல்கலைக்கழக பதிவாளர் ஆர். மருதமுத்து அறிவிப்பு
மாணவர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர்களுடைய திறமையை ஊக்குவித்து கல்வியறிவை புகட்டுவது என பல்கலைக்கழகம் முக்கியத்துவம் வகிக்கின்றது
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.
சங்கரன்கோவில் பல்கலைகழகத்தின் கீழ் சங்கரன்கோவில் சேரன் மகாதேவி, நாகப்பட்டி , புளியங்குடி திசையன்விளை, பணகுடி ஆகிய இடங்களில் பல்கலைக்கழக கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் …இந்த ஆறு கல்லூரிகளிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் சேர்க்கை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் ஆர். மருத குட்டி அறிவித்தார்.
மேலும் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இணைய தளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 10 நாட்களுக்குள் இளநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் இளநிலை தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களுக்குள் முதுநிலை படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் .
மாணவர்களின் சேர்க்கை விதிகள் தமிழக அரசு ஆணைப்படி செயல்படுத்தப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.