செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி விக்ரமசிங்கபுரம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
- பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்து குடும்பத்துடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் மிகவும் பிரசித்தி பெற்றது அகஸ்தியர் அருவி. வருடந்தோறும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவது வழக்கம்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அகஸ்தியர் அறிவிப்பு தங்கள் கார்களில் திருநெல்வேலி விக்ரமசிங்கபுரம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் தண்ணீர் கொட்டும் அழகை காண குவிந்தனர்.
அருவியில் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு வந்திருந்த பயணிகள் அனைவரும் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.
இதனால் வனத்துறை சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு இருந்தன. அங்கு வனத்துறையினர் தீவிர சோதனை நடத்திய பிறகு வாகனங்களை செல்வதற்கு அனுமதிக்க பட்டது.
கொட்டும் அருவியும் குளிர்ந்த காற்றும் பறவைகள் பாடும் கானமும் சூரிய சந்திர பிம்ப ஒலி வடிவங்களும் இயற்கை சூழலும் ஒரே சமயத்தில் கண்டு களித்தால் அதைவிட மகிழ்ச்சிக்கு இணையேதும் உண்டோ! என்பது போன்று வந்த சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் இனிதான சூழ்நிலையாகவே அமைந்தது இந்த அகஸ்தியர் அருவி.
Image source: dailythanthi.com