- நெல்லை தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறவியல் அகரமுதலி திட்ட இயக்குனர் கே விஜயராகவன் தூய தமிழ் பாற்றாளர் விருதுகள் பற்றி அறிவிப்பு.
- மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தூய தமிழ் பற்றாளர் விருது. பெற விரும்புவோர் ஜூலை 31தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நெல்லை மாவட்டம் தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறவியல் அகரமுதலி திட்ட இயக்கங்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றது. இதுகுறித்து அதன் இயக்குனர் கே விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு .
மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தூய தமிழ் பற்றாளர் விருது வழங்கப்படும் . அந்த விருதை பெற விரும்புவோர் ஜூலை 31தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அன்றாட நடைமுறை வாழ்க்கையில் தூய தமிழிலேயே பேசுகின்ற தகுதி வாய்ந்தவர்களை மாவட்டத்திற்கு ஒருவர் என தேர்ந்தெடுத்து தூய தமிழ் பற்றாளர் விருது மற்றும் தலா 20,000 பரிசுத்தொகை சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுவதற்கு தீர்மானம் செய்யப்பட்டுள்ளது
சொற்குவை டாட் காம் (sotkuvai.com) வலைதளத்தில் இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து செய்யவும். அதில் கேட்கப்படுவதை நிரப்பி, ஜூலை 31ம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது செந்தமிழ் சொற்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம் நகர் நிர்வாக அலுவலக வளாகம் , முதல் தளம் _ எண் 75, சாந்தோம் நெடுஞ்சாலை MRC நகர் சென்னை - 600028 என்ற அலுவலக முகவரிக்கு அனுப்பவும்.
விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் அறிஞர்கள் அல்லது பேராசிரியர்கள் அரசு அலுவலர்கள் போன்றவர் இடத்தில் தம் தனி தமிழ் பற்றினை உறுதி செய்த நற்சான்றிதழ் பெற்று உங்கள் விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். ஒரு பக்க அளவிலான தன் விவரக் குறிப்புகளையும் புகைப்படத்துடன் இணைக்க பட்டிருக்க வேண்டும். தற்போது வாழும் மாவட்டத்தை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்
கடைசி நாள் நிறைவடைந்த பின்னர் விண்ணப்பித்தோரின் தமிழ் பற்றை ஆராய்கின்ற வகையில் எந்த நாளில் வேண்டுமானாலும் முன்னறிவிப்பு என்று கைப்பேசி மூலமாக நேர்காணல் நடத்தப்படும் .
உரிய சான்றுகளுடன் முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என தமிழக அரசின் செந்தமிழ் சொற்பிறவியல் அகரமுதலி திட்ட இயக்குனர் கே விஜயராகவன் தம்முடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஆழ்ந்த அனுபவம் கொண்டு நடைமுறை வழக்கத்தில் தூய தமிழில் பேசும் சான்றோர்களுக்கு இந்த அறிவிப்பை நல்ல வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று திருநெல்வேலி டுடே தன்னுடைய வாழ்த்தை தெரிவிக்கின்றது.
Image source: linkedin.com