திங்கட்கிழமை ஜூலை 11 ஆம் தேதி திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்தி அம்மன் திருக்கோவில் ஆனி பெருந் திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது .
கோவிலில் வருடந்தோறும் தோறும் ஆனி பெரும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டும் திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் மிக சிறப்பாக தொடங்கியது.
தினமும் சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் தீபாராதனைகள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன
பூங்கோயில் சப்பரம், வெள்ளி கமலம் , வெள்ளி சக்கரம், கற்பக விருட்ச வாகனம், தங்க பூதம், சிம்மம் வெள்ளி குதிரை வெள்ளி ரிஷபம் , இந்திர விமானம் வெள்ளி சக்கர பல்லக்கு , வெள்ளி காமதேனு வாகனங்களில் சுவாமி அம்பாள் மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி காட்சி தந்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வந்தனர்.
ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சுவாமி நடராஜ பெருமாள் வெள்ளை சாத்தி எழுந்தருளியபடி உள்பிரகாரத்தில் வீதி உலா வந்தார். அதன்பின்னர் பச்சை சாத்தி எழுந்தருளி ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாவித்தார்.
மாலையில் சுவாமி கங்காலநாதர் தங்கச் சத்திரத்தில் எழுந்தருளிபடி சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலா மிகச் சிறப்பாக நடைபெற்றது .சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும் அம்மன் தங்க கிளி வாகனத்திலும் எழுந்தருளி நகர்வலம் வர பக்தர்கள் பக்தி பரவசத்தோடு கரகோஷம் எழுப்பினர்.
விழாவின் சிகர நிகழ்வாக தேரோட்டம் என் இனிய நிகழ்வு வரும் திங்கட்கிழமை ஜூலை 11 நடைபெற உள்ளது .
2 ஆண்டுகளுக்குப் பின்பு தேரோட்டம் நடைபெற இருக்கிறது. அதனால் திங்கட்கிழமை ஜூலை 11 ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தலைவர் விஷ்ணு உட்பட பலர் பங்கேற்க உள்ளனர் .
இதையொட்டி அதிகாலை 4:30 மணிக்கு சுவாமி அம்மன் தேரினில் எழுந்தருளுகிறார். காலை 9 மணிக்கு மேல் திருத்தேர் வடம் பிடித்த நிகழ்ச்சியும் நடைபெறுவதற்கு அதற்கான ஏற்பாடுகளை கோவிலில் நிர்வாகம் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து இருக்கிறது.
பக்தர்கள் ஏராளமான இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.