தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உட்பட 23 மாவட்டங்களில் பேருந்து சேவை துவங்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரில் உள்ள நகைக்கடை, ஜவுளிக்கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
நேற்று முதல் இந்த புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை முதல் பேருந்துகள் இயங்க தொடங்கின. இதன் காரணமாக நேற்று நேற்று மாநகர சாலைகளில் முழு அளவில் போக்குவரத்து நடைபெற துவங்கி உள்ளதால் திருநெல்வேலி மாநகரில் உள்ள அனைத்து முக்கிய சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. குறிப்பாக வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, முருகன்குறிச்சி சிக்னல் பகுதி, கதீட்ரல் சர்ச் பகுதி, கொக்கிரகுளம் பகுதி, ஸ்ரீபுரம், திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, திருநெல்வேலி டவுன் ரத வீதிகள், குற்றாலம் சாலை, பேட்டை சாலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து வாகனங்கள் நெருக்கடியாக ஊர்ந்து சென்ற வண்ணம் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.