திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைக்கட்டுகளில் இருந்து கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் நெல்லைக்கால்வாய் மற்றும் பாளையங்கால்வாய் மற்றும் பிற கால்வாய்கள் வழியாக குளம் மற்றும் பாசனத்திற்கு பாய்ந்தோடும்.
தற்போது நெல்லைக்காய்வாய் வழியாக திறக்கப்பட்ட தண்ணீரின் வரத்தால் திருநெல்வேலி டவுனில் உள்ள நயினார்குளம் முழுவதுமாக நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. கடந்த வாரம் வரை தண்ணீர் இல்லாததால் வறண்டு போய் மைதானமாக காட்சியளித்த நயினார்குளத்தில் அப்பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடி வந்த நிலையில் இந்த வாரம் குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் வழக்கம் போல இந்த குளத்திற்கு தண்ணீர் நிரம்பியதும் வரும் வெளிநாட்டு பறவைகள் வரத்தும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.