திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளராக பதவி வகித்த திரு.கண்ணன் அவர்களுக்கு பதிலாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இணை ஆணையாளராக பணியாற்றி வந்த திரு.விஷ்ணுச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களை திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுப்படி திருநெல்வேலி மாநகராட்சியின் புதிய ஆணையாளராக திரு.விஷ்ணுச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்கள் நேற்று திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் முன்னாள் மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன் அவர்கள் பொறுப்புகளை ஒப்படைத்தார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் நேற்று உயரதிகாரிகளை சந்திப்பதற்காக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.