- நெல்லை மாவட்டத்தில் கொளுத்தும் கோடை வெயில்.
- இளநீர், பதநீர், நுங்கு, சர்பத் விற்பனை ஜோர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் காலம் துவங்கியுள்ளதால், மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், சேரன்மகாதேவி, களக்காடு, பணகுடி, வள்ளியூர், நாங்குநேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பித்துக்கொள்ள வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் மக்கள் ஆறு, குளம், அருவி போன்ற நீர்நிலைகளில் குளிக்க குவிந்து வருகின்றனர். மேலும் வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உஷ்ணத்தை தவிர்க்க இளநீர், சர்பத், நுங்கு சர்பத், பதநீர், மோர், கம்பங்கூழ், கேப்பை கூழ் போன்ற பானங்களை ஆர்வமுடன் வாங்கி பருகி வருகின்றனர்.
Image source: Facebook.com