- இலஞ்சி குமாரர் கோவில் கும்பாபிஷேகம்.
- திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தென்காசி அருகே அமையப்பெற்றுள்ளது பிரசித்தி பெற்ற இலஞ்சி குமாரர் திருக்கோவில். இந்த கோவிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் பூர்த்தியடைந்த நிலையில் நேற்று கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது.
முன்னதாக கடந்த 16/03/2022 அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த கும்பாபிஷேக விழாவில் தினமும் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. தொடர்ந்து கும்பாபிஷேக தினமான நேற்று காலை விக்னே ஸ்வர பூஜை, 6-ம் கால யாகசாலை பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் காலை 9.45 மணியளவில் கோவில் விமானங்களுக்கும், வள்ளி தேவசேனா சமேத திருவிலஞ்சி குமாரசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித கும்ப நீர் ஊற்றி அபிஷேகமும் செய்யப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Image source: Facebook.com