- திருநெல்வேலி நாங்குநேரி யூனியனில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திட்டப் பணி தீவிரம்.
- நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ் ஆரோக்கிய எட்வின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டம் அனைத்து தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் ஸ்மார்ட் வகுப்பு முறையில் கணினி செயல்முறை திட்டத்தை கொண்டு வருவதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. பள்ளிக்கல்வித்துறையின் சேவைகளை கணினி மயமாக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை மூலம் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் ஸ்மார்ட் க்ளாஸ் செயல்முறையை அமல் படுத்தப்பட உள்ளது .
ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் விரிவான பள்ளி கட்டமைப்பு திட்டம் ரூபாய் 90 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி நாங்குநேரி யூனியனில் அதிக அளவில் ஆன அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
அதை நிறைவேற்றும் வகையில், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ் ஆரோக்கிய எட்வின், இட்ட மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்கான பணியை , பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கட்சி நிர்வாகிகள் லிங்கேசன், ஒன்றிய கவுன்சிலர் பிரேமா, ஊராட்சி மன்ற தலைவர் சுமதி , சுந்தர், முருகப்பெருமாள் முன்னாள் செயலாளர் நம்பித்துறை , பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆறுமுகம் மாணவர்கள் சங்கத் தலைவர் மதியரசு, தலைமை ஆசிரியர் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Image source: dailythanthi.com