- நெல்லை மாவட்டம் ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
- ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ உ சி மைதானம் விளையாட்டு அரங்கில் , 44வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டி நேற்று நடைபெற்றது.
ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற ஒலிம்பியாட் விழிப்புணர்வு போட்டியை சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக தொடங்கி வைக்க,மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கினார்.
போட்டிகளை தொடங்கி வைத்து சபாநாயகர் அப்பாவு கூறியதாவது;
ஜூலை 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை, சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது.
இதன் அடிப்படையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடத்த அனுமதி பெற்றாலும் , தமிழகத்தின் நடத்தினால் தான் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்திருப்பது நம்முடைய முதலமைச்சர். மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடைபெற்று வருகின்றது என்பதை காட்டுகின்றது. அதனால் தமிழகத்தில் இந்த போட்டி நடத்தப்படுகின்றது. இது நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம் ஆகும்.
187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் வீராங்கனைகள் நமது மாநிலத்தில் வருகை புரிந்து செஸ் போட்டியில் பங்கேற்பது அனைவருக்கும் பெருமையாக இருக்கிறது.
ஒலிம்பியாட் போன்ற சர்வதேச போட்டிகளில் ,இங்கு பங்கேற்கும் மாணவ மாணவிகளும் திறமைகளை வளர்த்து பங்கேற்று , வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார் .
அப்துல் வஹாப் எம்.எல்.ஏ, துணை மேயர் ராஜு, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ். ஆர் ஜெகதீஷ், மாநகராட்சி மேயர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி , வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் , விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜான் போஸ்கோ, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி , மாவட்ட சதுரங்க கழக பொறுப்பாளர் பால்குமார் மற்றும் ஆசிரியர்கள் , அரசு அலுவலர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு விளையாட்டு போட்டி இனிதே நிறைவு பெற்றது.
Image source: dailythanthi.com