- மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஆட்சி மொழி கருத்தரங்க நேற்று முன்தினம் தொடங்கியது. இதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
நேற்று இரண்டாவது நாளாக நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் கலந்து கொண்டு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார். மேலும் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாக விளங்கிய நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரல்ரேகை தனிப்பிரிவு அலுவலகத்திற்கு கேடயத்தை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நெல்லை மண்டல தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சுந்தர் மற்றும் தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.
Image source: dailythanthi.com