- மகாசிவராத்திரியை ஓட்டி நான்கு கால வழிபாடுகள்.
- திருக்கோவில் நடைகள் இரவு முழுவதும் திறந்திருக்கும்.
திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி சிவாலயமான நெல்லையப்பர் திருக்கோவிலில் வரும் அன்று மகாசிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இதனை ஒட்டி அன்று இரவு முழுவதும் திருக்கோவில்கள் நடைகள் திறந்து வைக்கப்பட்டு நான்கு கால வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும்.
திருக்கோவிலுக்குள் உள்ள திருமூலமகாலிங்கம், சுவாமி நெல்லையப்பர், சகஸ்ரலிங்கம், வாயு லிங்கம், குபேரலிங்கம், சிவசைலப்பர், அனவரதலிங்கம், சங்கரலிங்கம், சொக்கநாதர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனை உடன் நான்கு கால வழிபாடுகள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு கால பூஜையிலும் பிரதோஷ நாயகர் வெள்ளி விடை வாகனத்தில் எழுந்தருளி கோவில் பிராகாரங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.