செய்து குறிப்புகள்:
- ஆவரைகுளம் அதை சுற்றியுள்ள மின்சார வாரிய சம்பந்த பணிகள் ஆவரைகுளத்திற்கே மாற்றம். ஆவரைக் குளம் மின் பயனீட்டாளர்கள் மகிழ்ச்சி.
- வள்ளியூர் யூனியன் ஆவரைக்குளம், சிதம்பராபுரம், யாக்கோபுரம், வடக்கன்குளம், அடங்கார்குளம், பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் இதனால் பயன் பெறுவர்
நேரம் மிச்சமாகி , காரியம் எளிதாகி பல வேலைகள் பூர்த்தியாகி, நிம்மதி பெருமூச்சு விடுதலில் ஒரு சுகம் உண்டு என்பதை இப்போதுதான் ஆவரை குளம் சுற்றியுள்ள மின் பயனீட்டாளர்கள் அனுபவிக்க போகின்றனர். அதற்கான பதிவுதனை காண்போம்..
வள்ளியூர் யூனியன் ஆவரைக்குளம், சிதம்பராபுரம், யாக்கோபுரம், வடக்கன்குளம், அடங்கார்குளம், பஞ்சாயத்து பகுதிகளை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள், குமரி மாவட்டம் குமாரபுரத்தில் அமைந்த இளநிலை உதவி மின்பொறியாளர் அலுவலகம் சென்று மின்வாரியம் தொடர்பான பணிகளை செய்து வந்தனர்.
இதனால் மிகவும் சிரமமாக இருந்து வந்து சூழ்நிலையில் சபாநாயகர் அப்பாவு, ஞான திரவியம் எம்பி ஆகியோரிடம், ஆவரைகுளத்தில் மின்வாரியம் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கான முயற்சி மேற்பட்டு வந்த நிலையில் ஆவரைகுளத்தில் புதிதாக இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் அமைக்கப்பட்டது.
ஞான திரவியம் எம்பி தலைமையில், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர் முன்னிலை வகிக்க ஆவரைகுளத்தில் இளநிலை மின் பொறியாளர் அலுவலகம் திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றினார். வள்ளியூர் மின்வாரியர் கோட்ட செயற் பொறியாளர் வானரசு வரவேற்று பேசினார்.
விழாவில் யூனியன் கவுன்சிலர் மகாலட்சுமி பஞ்சாயத்து தலைவர்கள் ஆவரைக் குளம் அழகு பாஸ்கர் அடங்கார்குளம் வசந்தா, சிதம்பரபுரம் யாக்கோபுரம் டாலின் ஜான்சி, வடக்கன்குளம் ஜான் கென்னடி உதவி செயற்பொறியாளர் ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Image source: Dailythanthi.com