கார்த்திகை அன்று அதிகாலை நீராடி
அகமும் புறமும் பக்தி மயமாகி
ஐந்து முக விளக்கை ஏற்றி
ஏற்றிய சுடர் தனிலே
மனம் ஒன்றாகி , திருநீறு
பூசிய நெற்றி நிறைவாகி
முருகா முருகா சரணம்
உன் பாதமே சரணம் என
வேண்டுகின்ற வேண்டுதலுக்கு
குரல் கேட்டு ஓடிவந்து
அருள்கின்ற அனுதினமுமே
கார்த்திகை விரதம்.
அப்படிப்பட்ட மிக விசேஷமான கார்த்திகை தினத்தில் முருகப்பெருமானை வழிபட்டு வாழ்வில் சிறப்பு காண்போம்.