செய்து குறிப்புகள்:
- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கலைக் கல்லூரி தற்போது அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளது.
- 15 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியராய் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) அர மருத குட்டி அவர்கள் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வந்த கலைக்கல்லூரிகள் இப்போது அரசிடம் மாற்றப்பட்டுள்ளது.
நாகலாபுரம் கடையநல்லூர் மற்றும் கன்னியாகுமரியில் அரசு கல்லூரிகளில் தற்காலிக முதல்வர் பணிக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
.
அதற்கான தகுதிகள் - பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் இணை பேராசிரியர் அல்லது பேராசிரியராக பணியாற்றி, 15 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தகுந்த தகுதிகளுடன் ஓய்வு பெற்று ஓய்வு பெற்று 1-7- 2022 ஆம் நாள் அன்று 61 வயதுக்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
பல்கலைக்கழக இணையதள வாயிலாக பதிவிறக்கம் செய்து 13-6-2022 தேதிக்குள்,
பதிவாளர்
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
திருநெல்வேலி 12
என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று பதிவாளர் (பொ) அர. மருத குட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.
கல்வி எனும் அறிவு தந்து நல்வழி பாதையில் அழைத்துச் செல்லும் மிகப்பெரிய ஆற்றல் பெற்றவர்கள் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட தெய்வீக ஸ்தானத்தில் இருக்கும் பேராசிரியர்கள் போற்றப்படத்தக்கவர்கள். அவர்கள் பணி மென்மேலும் சிறப்பாக வளர வேண்டும் என்று திருநெல்வேலி டுடே வாழ்த்து தெரிவிக்கின்றது.