தென்காசி மாவட்டத்தில் வரும் 19/02/2022 அன்று நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவலர்களின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் அவர்கள் உத்தரவுப்படி கடையநல்லூரில் ஆயுதப்படை காவலர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதற்கு புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.கணேஷ் அவர்கள் தலைமை தாங்கிட, கடையநல்லூர் காவல்துறை ஆய்வாளர் திரு.விஜயகுமார் முன்னிலை வகித்தார். இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையத்தில் தொடங்கி கிருஷ்ணாபுரம் பகுதி, ரஹ்மானியாபுரம், பேட்டை, மாவடிக்கால், ரயில்வே பீடர் ரோடு, தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் கடையநல்லூர் காவல் நிலையத்தில் நிறைவு பெற்றது.