கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நேற்று நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பயன்படுத்தப்படவுள்ள 233 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் காரவிளை சமுதாய நலக்கூடத்தில் இருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாநகராட்சி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகத்தில் அந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவலர் மூலம் பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.