- தமிழகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை பள்ளிகள் அனைத்தும் துவக்கம்
- பாளையங்கோட்டையில் பாதுகாப்பு கருதி பள்ளி வாகனங்களில் அதிகாரிகள் ஆய்வு
உயிர் எனும் உன்னதம் உலகுக்கு உணர்த்திய தாய்க்கு தெரியும் அதன் விலை என்னவென்று.... அப்படிப்பட்ட விலைமதிப்பில்லா உயிரை எந்த சூழ்நிலையிலும் பாதுகாக்க வேண்டியது ஒரு அரசின் தலையாய கடமை என்பதை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாளையங்கோட்டையில் தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் திங்கட்கிழமை பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது
இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வரும் நிலையில் கல்விக்கூடங்களை சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை அரசு செய்து வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் அழைத்துச் செல்லக்கூடிய பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்ய பட வேண்டும்.
இதை தொடர்ந்து பள்ளி வாகனங்கள் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உள்பட்ட நெல்லூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டன.
155 தனியார் பள்ளிகளில் உள்ள பஸ்கள் வேன்கள் என மொத்தம் 511 வாகனங்கள் நேற்று சோதனை செய்யப்பட்டு, அந்த வாகனங்களில் கதவு ஜன்னல் அவசர வழி முதலுதவி பெட்டி தொடர்புகளின் மூலம் குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதான வாகனங்கள் ஆய்வு செய்யும் பணியும் நேற்று நடந்தது . வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கவிஞர் கனகவல்லி, செண்பகவள்ளிஉள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்
இதில் 16 வகையான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் லைசென்ஸ் வயது விவரம் பற்றி ஆய்வு செய்தனர். இந்த சோதனை நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் மேற்பார்வை செய்ய ,வாகன டிரைவர்களுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சியும் அளிக்கப்பட்டது .பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் வீரர்கள் தீ தடுப்பு முறைகள் குறித்து ஒத்திகை நடத்தி விளக்கம் அளித்தனர்
Image source: dailythanthi.com