- ஜூன் மாதம் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது
- இதையொட்டி நெல்லையில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
குழந்தைகள் மலரும் மொட்டுக்கள், வருங்கால தூண்கள் ,நாட்டை முன்னேற்ற துடிக்கும் இளந்தளிர்களாய் உருவாக்க வேண்டும் என்பதில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது .
குழந்தைகள் சிறுவயதில் தொழிலாளர்களாய் உருவாகி. குழந்தைகளின் எதிர்காலம் வீணாக கூடாது என்பதை கருத்தில் கொள்ளும் விதமாக குழந்தைகள் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் என்று வருடா வருடம் ஜூன் மாதம் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது.
கலெக்டர் அலுவலகத்தில் விஷ்ணு அவர்கள் தலைமை தாங்கி குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்
சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ் தொழிலாளர் துறை துணை ஆணையர் (அமலாக்கம்) பிரசன்னா, மாயாவதி ஆய்வாளர்கள் நளினி சத்யபிரகாஷ் விஸ்வநாதன், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு திட்ட இயக்குனர் சந்திரகுமார் பணியாளர்கள் ராஜேஸ்வரி , சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
தொடர்ந்து குழந்தை தொழிலாளர் ஒழிப்பு நாள் உறுதிமொழியை சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமார் தாஸ் தலைமையில் அனைவரும் ஏற்றனர். நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழியை உதவி ஆணையாளர் சொர்ணலதா தலைமையில் அனைத்து ஊழியர்களும் ஏற்றனர்.
குழந்தை தொழிலாளி எனும் சொல் மறைந்து அனைத்து குழந்தைகளும் கல்வி எனும் ஒளி பெற்று முன்னேற்றப்பாதையில் நடக்கும் வகையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம். சிந்தை மகிழ்வோம். செயல் பூர்த்தியான நிறைவு காண்போம்.
Image source: dailythanthi.com