தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவி வருவதால் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு பொது மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் நிவாரண நிதியும், 14 வகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்குவதாக அறிவித்திருந்தது. இதில் முதல் கட்டமாக ரூபாய் சென்ற மாதம் வழங்கப்பட்ட நிலையில், நேற்று முதல் இரண்டாம் கட்டமாக ரூபாய் நிதியும், வகை பொருட்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி நேற்று முதல் இரண்டாம் கட்டமாக கொரோனா நிவாரண நிதியும், 14 பொருட்களின் தொகுப்பும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டது. பாளையங்கோட்டை - பெருமாள்புரம் தபால் நிலையம் அருகில் உள்ள ரேஷன் கடையில் நேற்று நடைபெற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.