Logo of Tirunelveli Today

நாங்குநேரி யூனியனில் புதிய குடிநீர் இணைப்பு பணி தொடக்க விழா

July 28, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

செய்திக்குறிப்புகள்:

  • நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியனில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க பணி தொடக்க விழா நடைபெற்றது.
  • நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ் ஆரோக்கிய எட்வின் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலியில் இட்ட மொழி நாங்குநேரி யூனியன் பருத்திப்பாடு பஞ்சாயத்து நெல்லை நகரில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் நெடு நாட்களாக மக்கள் குடிநீர் இணைப்பு வழங்க கோரி வலியுறுத்தி வந்தனர்.

இதனை கருத்தில் கொள்ளும் விதமாக மேற்கொண்டு இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. நாங்குநேரி பருத்திப்பாடு பஞ்சாயத்து யூனியன் பொது நிதியில் இருந்து 4.20 லட்சத்தில் இணைப்பு வேண்டுவோர் வீடுகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்தது. நாங்குநேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் எஸ் ஆரோக்கிய எட்வின் தலைமையில் இதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.

சேந்தனார் குளத்தில் 500 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியையும் எஸ் ஆரோக்கிய எட்வின் தொடங்கி வைத்தார்

ஊராட்சி மன்ற தலைவர் ஊசி காட்டான், ஊராட்சி செயலாளர் செல்லம்மாள் உட்பட பலர் முன்னிலையில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணி தொடக்க விழா இனிதே நடைபெற்று நிறைவு பெற்றது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published.

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify