செய்திக்குறிப்புகள்:
- நெல்லையில் நேற்று ஒரு மணி நேரம் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது.
- சாலைகளில தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் ஊர்ந்து சென்றன.
திருநெல்வேலி மாவட்டம் நேற்று திடீரென்று ஒரு மணி நேரம் மழை இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் தண்ணீர் தேங்கியால் வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து சென்றன
கடந்த சில வாரங்களாகவே நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாகவே சென்ற வாரம் மழை பெய்து இருந்தாலும் மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.
நேற்று மதியம் 2-30 ,மணி அளவில் திடீரென்று வானம் மேகம் மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. 3 மணியளவில் சாரலாக மழை தூறியது . 3-45 மணிக்கு இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது .
நெல்லை சந்திப்பு டவுன் வண்ணாரப்பேட்டை பாளையங்கோட்டை பகுதிகளில் ஒரு மணி நேரம் இடைவிடாது மழை கொட்டியதால் , மழை நீர் சாலை தெருக்களில் நிரம்பியது.
வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் தாழ்வான பகுதிகளிளிலும், ரோடுகளிலும் தேங்கி நின்றது.
நெல்லை சந்திப் பிள்ளையார் கோவில் , மற்றும் டவுன் மார்க்கெட் பகுதிகளில் அதிக தண்ணீர் தேக்கத்தினால் பொதுமக்கள் சிரமத்துடன் நடந்து சென்று பொருட்களை வாங்கிச் சென்றனர்.
பாளையங்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மின்தடையும் ஏற்பட்டது. இதேபோல நெல்லை சந்திப்பு பகுதிகள் மற்றும் மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றதால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, பாபநாசம், சேரன்மாதேவி, முலைக்கரைப்பட்டி ,மணிமுத்தாறு, பேட்டை ,ரெட்டியார்பட்டி, சுத்தமல்லி, கல்லூர் போன்ற பகுதிகளிலும் மழை பெய்தது.
மழை பதிவாகிய விவரங்கள்;
நெல்லையில் 16 மில்லி மீட்டர், பாளையங்கோட்டையில் 7 மில்லி மீட்டர் , சேரன்மாதேவியில் 2 மில்லி மீட்டர் , பாபநாசத்தில் 9 மில்லி மீட்டர், நாங்குநேரியில் 36 மில்லி மீட்டர் என மழையின் அளவு பதிவாகியுள்ளது.
Image source: dailythanthi.com