- கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றி அமைப்பு.
- பத்தமடையில் விவசாயிகள் மகிழ்ச்சி.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் விவசாயிகள் பயன்பாட்டிற்காக புதிதாக நிறுவப்பட்ட 16 கே.வி.ஏ திறன் கொண்ட புதிய மின்மாற்றியின் சேவையை நேற்று (29/03/2022) கல்லிடைக்குறிச்சி மின் செயற்பொறியாளர் திரு.சுடலையாடும் பெருமாள் அவர்கள் இயக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வயல்வெளிக்கு மத்தியில் வைத்து மின் ஊழியர்கள், விவசாயிகளுடன் இணைந்து கேக் வெட்டி மகிழ்ந்தனர். தங்களது கோரிக்கையை ஏற்று விரைவாக மின்மாற்றி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு விவசாயிகள் பாராட்டு தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியால் பத்தமடை பகுதி விவசாயிகள், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் திரு.மகேஷ் சுவாமிநாதன் அவர்கள், சேரன்மகாதேவி உதவி செயற்பொறியாளர் திரு.கைலாசமூர்த்தி உள்ளிட்ட மின்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Image source: Facebook.com