- அகோர வடிவில் காட்சித்தரும் விநாயகர்.
- அந்நியர் படையெடுப்பால் பின்னமான திருமேனி.
திருநெல்வேலி மாநகரில் உள்ளது பிரசித்தி பெற்ற பிட்டாபுரத்தி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் தனி சன்னதியில் கிழக்கு திசை நோக்கி காட்சியளிக்கிறார் அகோர விநாயகர். பெயருக்கு ஏற்றபடி இவர் தனது நான்கு கைகளும், தும்பிக்கையும் துண்டிக்கப்பட்ட நிலையில் அகோரமாக காட்சித்தருவது சிறப்பம்சம்.
முற்காலத்தில் அந்நியர்கள் படையெடுப்பின் போது இந்த விநாயகர் திருவுருவம் சேதப்படுத்தப்பட்டதாகவும், அதன் பின்னர் பின்னமான உருவத்தை கோவிலில் வைத்திருக்க கூடாது எனக் கருதி இந்த விநாயகரை திருக்குளத்துக்குள் வீசியதாகவும், பின்னர் விநாயகப்பெருமான் கனவில் தோன்றி கூறியபடி பின்னப்பட்ட நிலையிலேயே மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் இவரின் வரலாறு சிறப்பித்து கூறப்படுகிறது.