செய்திக்குறிப்புகள்:
- ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம்.
- இதை முன்னிட்டு நெல்லை தேசிய மாணவர் படை சார்பில் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இளமையின் ரகசியம் எது? என யோகா கலை கற்றவர் இடத்தில் கேட்டால்…
'நினைவகமுடல் (நினைவு+அகம்+உடல்) அனைத்தும் தஞ்சம் புகுந்து, உற்சாகம் கொடுத்து உடல் எழுச்சி பெற ஆரோக்கியம் தரும் யோகா பயிற்சி மேற்கொண்டால் இது சாதகமாகும்' என்பார்கள்
அவ்வளவு உடலுக்கு உள்ளத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய யோகா பற்றி அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக உலகெங்கும், ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகின்றது.
இதை மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக பாளையங்கோட்டை ஜான்சி கல்லூரியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு , நெல்லை தேசிய மாணவர் படை 5-வது பட்டாலியன் அணி சார்பில் யோகாசன விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிர்வாக அதிகாரி லெப்டினன்ட் கர்னல் நிதீஷ்குமார் தலைமையில் யோகா பயிற்சியாளர் சுதா நேற்று பொது மக்களுக்கு யோகாசனம் கற்றுக் கொடுத்தார்.
இந்த தருணத்தில் 'யோகா எனும் கலை அறிவோம். அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வாழ்வோம். அதன் பலம் பற்றி அறிந்து வாழ்வில் மென்மேலும் சாதனைகள் பல பெறுவோம்' எனும் விழிப்புணர்வு கருத்தை திருநெல்வேலி டுடே மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றது.
Image source: dailythanthi.com