செய்திக்குறிப்புகள்:
- கொரோனா காரணமாக தடைபட்ட ரயில்கள் மீண்டும் இயக்கம் என ரயில்வே சார்பில் அறிவிப்பு
- பெரும் உற்சாகத்தில் நெல்லை திருச்செந்தூர் பயணிகள்
இரண்டு ஆண்டுக்கு முன்பு சொந்தபந்தங்கள் ஒருவர் வீடு ஒருவர் வந்து கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தோம். செய்த பலகாரங்கள் பரிமாறிக்கொண்டோம். ஒன்றாகக் கூடி பொழுதுபோக்காக சுற்றிக் கொண்டிருந்தோம். கோவில் குளம் என வயதானவர்களை அழைத்துக்கொண்டு புண்ணிய தலங்களுக்கு சென்று வந்தோம். அனைத்துக்கும் ரயில் பயணம் நமக்கு கை கொடுத்தது.
ஆனால் கொரோனா வந்த பிறகு நம்மால் சுதந்திரமாக எங்கும் வெளியே செல்ல முடியாது கூண்டுக்கிளி போல் அடைப்பட்டு கிடந்தோம். இப்பொழுது மீண்டும் பழைய வாழ்க்கை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்படாமல் இருந்த பெரும்பாலான ரயில்கள் நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றது.
தென் மாவட்டங்களில் ரயில்கள் அனைத்தும் தற்போது சிறப்பு ரயில்களாகவும் எக்ஸ்பிரஸ் ரயிலாகவாம் மாற்றி கூடுதல் கட்டணதொகையோடு இயக்கப்பட்டு வருகிறது.
நெல்லையிலிருந்து காலை 7:20 மணிக்கு ரயில் புறப்பட்டு 9 .05 மணிக்கு திருச்செந்தூர் அடைதல். மீண்டும் திருச்செந்தூரில் இருந்து மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு நெல்லை அடைதல்
இதே போல் நெல்லையில் இருந்து காலை 7 மணிக்கும் மறுமார்க்கத்தில் மாலை 5:30 மணிக்கு செங்கோட்டையிலிருந்தும் இரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. .
இரண்டு வழித்தடங்களில் ரயிலை நான்கு முறை இயக்க வேண்டும் என்று அம்பை, தென்காசி, வீர நல்லூர், சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி ஆழ்வார்குறிச்சி ஆகிய பகுதிகளில் அனைத்து தரப்பினரும் பயனடைவார்கள் என்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி செங்கோட்டை திருச்செந்தூருக்கு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது .
அதன்படி செங்கோட்டை நெல்லை பயணிகள் ரயில் காலை 6:40 மணிக்கு செங்கோட்டையிலிருந்து புறப்பட்டு காலை 8:50க்கு நெல்லை வந்ததடையும்.
மறு மார்க்கம் செங்கோட்டை பயணிகள் ரயில் மாலை 6:15 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு இரவு 8. 35க்கு செங்கோட்டை வந்ததடையும்.
Image source: India Rail Info