- சனி பகவான் அவதரித்த தினம் வைகாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை
- 30-5-2022 திங்கட்கிழமை சோமவார அமாவாசை சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
வைகாசி அமாவாசை சிறப்பு தினத்தில் சனீஸ்வரன் பிறந்த தினமாகிய இன்று சனீஸ்வர பகவானை வழிபடுவது சிறப்பு.
நாம் முழுமையாக நம்பும் ஜோதிட சாஸ்திரத்தில் பட்டம் பெற்றவர் சனீஸ்வரர். நம்முடைய பூர்வ ஜென்ம பலன்களை கொண்டு நமக்கு பலன் வழங்குவார் . சனியை கண்டு நாம் பயந்தாலும் உண்மையில் தர்மவான் நீதிமான் என்று போற்றப்படுபவர்.
பரம ஏழையை கூட கோடீஸ்வரராக ஆக்கும் சக்தி சனீஸ்வர பகவானுக்கு உண்டு. நம்முடைய எண்ணங்கள் பரிசுத்தமாக இருந்தால் சனியின் ஆதிக்கத்தில் இருந்தாலும் நமக்கு நன்மையை கொடுப்பார் என்பதை முழுமையாக நம்பி அவரை வழிபட்டால் அதற்கேற்ற பலன் கண்டிப்பாக உண்டு.
சனீஸ்வரன் பிறந்த வைகாசிஅமாவாசையான இன்று சனி ஓரையில் சனி பகவானை வழிபட்டு, அவருக்கு உகந்த எள் தீபம் ஏற்றி கருப்பு நிற வஸ்திரத்தை சாற்றி வழிபடவும்
வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும், ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த நற் பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும். என்பதையும் இந்த அமாவாசை தினத்திலே அகம் தனில் உணர்வோம். சனிபகவான் ஆசிதனை பெறுவோம்.
Image source: pinterest.com