செய்திக்குறிப்புகள்:
- மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்.
- இரவு முழுவதும் திருக்கோவில்களின் நடை திறந்திருக்கும்.
மகா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவில், தொண்டர்கள் நயினார் கோவில், கைலாசபுரம் கைலாசநாதர் கோவில், சிந்துபூந்துறை மீனாட்சி - சொக்கநாதர் கோவில், கருப்பந்துறை அழியாபதீஸ்வரர் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில், திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோவில், அம்பாசமுத்திரம் அம்மையப்பர் கோவில், திருமூலநாதர் கோவில், விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவில், பாபநாசம் பாபநாசநாதர் கோவில், வீரவநல்லூர் பூமிநாதர் கோவில், நாங்குநேரி திருநாகேஸ்வரம் கோவில் உள்ளிட்ட பல சிவன் கோவில்களில் இன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் விமரிசையாக நடைபெற உள்ளது.
சிவராத்திரி விழாவையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் திருக்கோவில்களின் நடைகளும் இன்று இரவு முழுவதும் திறந்தே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.