- விரதங்களுள் சிறந்தது மகா சிவராத்திரி விரதம்.
- சிவராத்திரி விரதம் இருந்தால் நற்கதி அடையலாம்.
மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும். இந்நாளில் விரதம் இருந்து பிரம்மதேவன், திருமால், குபேரன், இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி பகவான் உள்ளிட்ட தேவர்கள் பலரும் சிவபெருமானின் அருளை பெற்று உயர்ந்த நிலையை அடைந்தார்கள் என்று புராண கதைகள் கூறுகின்றன.
சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய அனுஷ்டானங்கள் மற்றும் நித்ய பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
பின்னர் இரவில் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்கு நடைபெறும் நான்கு கால பூஜைகளை கண் விழித்து ஒருமித்த மனதுடன் தரிசிக்க வேண்டும். தொடர்ந்து மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடித்து தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்து கொள்ள வேண்டும்.
இந்த மகா சிவராத்திரி விரத்தை முறைப்படி கடைபிடிப்போர்கள் தங்கள் முன் ஜென்ம பாவங்கள் நீங்கப் பெற்று நற்கதி அடைவார்கள் என்று புராணங்கள் விவரிக்கின்றன.
Image Source: facebook.com