செய்திக்குறிப்புகள்:
- புதிய தேர் செய்யும் பணி நிறைவு.
- பாளையங்கோட்டையில் பக்தர்கள் மத்தியில் வெள்ளோட்டம்.
பாளையங்கோட்டையில் அமையப்பெற்றுள்ளது பழம்பெருமை வாய்ந்த அழகிய மன்னார் ராஜகோபால சுவாமி திருக்கோவில். இங்கு ஆண்டுதோறும்
பங்குனி உத்திரம் அன்று தேரோட்டம் விமரிசையாக நடைபெறும் நிலையில் தேர் பழுதடைந்த காரணத்தால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய தேர் ஓடவில்லை.
இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று கோபாலன் கைங்கர்ய சபாவினர் மூலம் பக்தர்களின் ஒத்துழைப்புடன் திருக்கோவில் வளாகத்தில் வைத்து புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று வந்தது. 36 அடி உயரம், 14 அடி அகலம், 35 டன் எடை கொண்ட புதிய மரத்தேர் தயாரான நிலையில் நேற்று காலை வெள்ளோட்டம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Image Source: dailythanthi.com