- மார்ச்-18 ல் பங்குனி உத்திரம் கொண்டாட்டம்.
- திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகியவற்றில் வருடம்தோறும் பங்குனி உத்திரம் அன்று குலதெய்வம் மற்றும் குலசாஸ்தா கோவில்களில் வழிபாடு மேற்கொள்ளும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வருடம் வரும் 18/03/2022 அன்று பங்குனி உத்திர விழா நடைபெறுவதை முன்னிட்டு, அன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு வரும் 18/03/2022 அன்று மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதனை ஈடுசெய்யும் வகையில் அடுத்து வரும் 26/03/2022 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image source: Facebook.com