- திருநெல்வேலி மாநகராட்சியில் புதிய உழவர் சந்தை.
- மாவட்ட ஆட்சித்தலைவர் அடிக்கல் நாட்டி வைத்தார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் உள்ள பாளையங்கோட்டை மண்டலம் அரசு அலுவலர் குடியிருப்பு விரிவாக்க பகுதியில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள உழவர்சந்தையின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் கலந்து கொண்டு புதிய உழவர்சந்தைக்கான அடிக்கல்லை நாட்டினார்.
திருநெல்வேலி மாநகரில் ஏற்கனவே மகாராஜநகர், கண்டியபேரி, மேலப்பாளையம் ஆகிய 3 இடங்களில் உழவர் சந்தை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், மாநகரில் தற்போது நான்காவதாக ஆரம்பிக்கப்பட உள்ள இந்த உழவர் சந்தையில் 16 கடைகள், ஒரு குளிர்பதன கிடங்கு அமைய உள்ளது . மேலும் இங்கு பொதுமக்கள் எளிதாக காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைகளை தெரிந்து கொள்ளும் வகையில் நவீன டிஜிட்டல் போர்டு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாளையங்கோட்டை தாலுகாவிலுள்ள ரெட்டியார்பட்டி, தாமைரச்செல்வி, கோவைகுளம், மருதகுளம்,பருத்திபாடு, தருவை, சிவந்திபட்டி, முத்தூர், கருங்குளம், முன்னீர்பள்ளம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Image source: dailythanthi.com