- பாளையங்கோட்டை பங்குனி திருவிழா.
- இரட்டை கருட வாகனங்களில் பெருமாள் எழுந்தருளல்.
பாளையங்கோட்டை நகரின் மத்தியில் அமையப்பெற்றுள்ள பிரசித்தி பெற்ற அழகிய மன்னார் ராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் கடந்த 10/03/2022 அன்று பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஐந்தாம் திருநாளை முன்னிட்டு நேற்று இரவில் இரட்டை கருடசேவை விழா நடைபெற்றது.
இதில் அழகியமன்னார் ஒரு கருட வாகனத்திலும், ராஜகோபாலர் ஒரு கருட வாகனத்திலும் சர்வ அலங்காரங்களுடன் குடைவரையில் தீபாராதனையாகி எழுந்தருளி நான்கு பாடல்கள் வீதிகள் மற்றும் நான்கு தேர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு "கோபாலா கோவிந்தா" கோஷம் முழங்க பெருமாளை சேவித்தனர்.
Image source: Facebook.com