செய்திக் குறிப்புகள்
- பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு பூங்காவை மாவட்ட கலெக்டர் விஷ்ணு திறந்துவைத்தார்
- மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக ரூ 14 லட்சம் செலவில் சிறப்பு பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மனவளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு 14 லட்சம் செலவில் சிறப்பு பூங்கா கட்டப்பட்டு , திறப்பு விழா நேற்று மாவட்ட கலெக்டர் விஷ்ணுவின் தலைமையில் நடந்தது.
அப்துல் வகாப் எம்எல்ஏ , மாநகராட்சி மேயர் சரவணன் , துணை மேயர் கே. ஆர். ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகள் படுக்கைகள் மருத்துவ உபகரணங்களை கலெக்டர் பற்றி கேட்டறிந்தார்.
மேலும் கடந்த ஆண்டு அதிக முறை இரத்த தானம் செய்பவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய கலெக்டர் விஷ்ணு மக்களிடையே ரத்ததானம் செய்வது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஊட்டும் வகையில் உரையாற்றினார்.
ஆண்டுக்கு 7.5 லட்சம் யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டாலும் அந்த ரத்த வகைகள் எல்லாம் ஆஸ்பத்திரியில் சீராக கிடைப்பது இல்லை.
எனவே இரத்த தானம் செய்பவர்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் நீங்கள் ரத்ததானம் செய்யுங்கள். கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் 14 நாட்கள் கழித்து ரத்த தானம் செய்யலாம்.
ரத்ததானம் செய்கிறவர்கள் இரும்புச் சத்து மிகுந்த பேரிச்சம் பழம் மாதுளை, அத்திப்பழம் , கீரைகள், வெந்தயம், சுண்டைக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் விஷ்ணு பேசினார்.
மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் கல்லூரி துணை முதல்வர் சாந்தாரம்மன் ரத்த-வங்கி பேராசிரியர் மணிமாலா மருத்துவ கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
தானத்தில் சிறந்தது ரத்த தானம் அதை மனமுவந்து மகிழ்ச்சியோடு கொடுத்தால், அதனால் பலருடைய உயிர் காக்கப்படுவதை ஒரு நிமிடம் நினைத்தால் அதில் காணும் மகிழ்வே பேரின்பம் என்பதை உணர்ந்து ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் கொடுக்க முன்வாருங்கள் . வாழ்க்கையில் நல்ல காரியம் செய்தோம் என்ற மன நிறைவோடு வாழுங்கள்.
Image source: dailythanthi.com