செய்திக் குறிப்புகள்
- தமிழகம் முழுவதும் மனை பிரிவிற்கு விண்ணப்பிக்க ஒப்புதல் வழங்க ஆன்லைன் வசதி புதிய திட்ட வசதி அறிமுகம்
- திருநெல்வேலியில் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது
எங்கும் புதுமை , எதிலும் புதுமை, எண்ணம் புதுமை, அதில் மலரும் கருத்தும் புதுமை என பார்க்கும் இடமெல்லாம் புதுமை மயமாக விஞ்ஞானம் பலவகைகளில் முன்னேற்றமடைந்து மக்களின் வேலைகளை மிகவும் எளிதாக எளிதாக்குகிறது.. இதை பறைசாற்றும் விதமாக
தமிழகம் முழுவதும் அனுமதி பெற விரைவில் ஆன்லைனில் அறிமுகமாகும் நிலையில் அது குறித்து பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் திருநெல்வேலியில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது
நகர் ஊரமைப்பு இயக்கம் ( டிடிசிபி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
சட்டப்பேரவையில் வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின் போது , தமிழகம் முழுவதும் மனை பிரிவிற்கு விண்ணப்பிக்க ஒப்புதல் வழங்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனை அடிப்படையில் இணையவழி மனைப்பிரிவு குறித்த பயிற்சி முகாம் திருநெல்வேலி மாவட்ட நகர் ஊரமைப்புத் துறை அலுவலகத்தில் நடைபெற்றது .
விண்ணப்பித்தல், கோப்புகள் மீது நடவடிக்கை எடுத்தல் , அரசு கட்டணம் செலுத்துதல் ஆணை வழங்குதல் உள்ளிட்ட முறைகள் குறித்து முறையான பயிற்சி பற்றி முகாமில் பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது .
ஆன்லைன் வசதி வந்துவிட்டால் மனுதாரர்கள் விரைவில் மனைக்குறிய அனுமதி பெறலாம். திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அலுவலக பணியாளர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.
ஓடியாடி வேலை செய்த அலுப்பிருக்காது என்று அன்று சொன்ன நிலைமாறி , ஓடி ஆடி வேலை செய்யாது , ஓரிடத்தில் வேலையை துரிதமாக முடித்து நேரத்தை மிச்சப்படுத்தி அடுத்த பணி நோக்கி முன்னேறிச் செல்வோம் எனும் கருத்துதனை திருநெல்வேலி டுடே இந்த பதிவினில் முன்வைக்கின்றது.
Image source: Dinamani