Logo of Tirunelveli Today

சுடலை மாடசாமி கோவில் கொடை விழாவில் , ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.

June 18, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான நெல்லை மாவட்டத்தில் வடக்கு விஜயநாராயணம் ஒத்தபனை சுடலை மாடசாமி கோவில் கொடை விழா வருகிற 24-ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடப்பதை முன்னிட்டு
தொடக்கமாக கால் நாட்டு நிகழ்ச்சி மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றன

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் . பக்தர்கள் விரதம் இருக்கும் பால்குடம் எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது . காப்பு சாத்தும் நிகழ்ச்சி வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது .

24ஆம் தேதி விழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் மனோன்மணி ஈஸ்வரர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து ஊர்வலம் பாலாபிஷேகம் சிறப்பு அலங்கார பூஜை , படைப்புடன் கூடிய சாமக்கொடை , சுவாமிக்கு பொங்கலிட்டு நேர்த்திக்கடனாக கிடா வெட்டுதல் போன்ற பக்திகரமான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

கொடை விழாவை முன்னிட்டு நெல்லை நாகர்கோவில் வள்ளியூர், நாங்குநேரி, திருச்செந்தூர் , சாத்தான்குளம், திசையன்விளை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு அரசு பஸ்கள் பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும் கொடைவிழா ஒருங்கிணைப்புக்குழு இ நடராஜன் ,ஆய்வாளர் கார்த்திகேஷ்வரி, தக்கார் கண்ணன், செயல் அலுவலர் வெங்கடேஸ்வரி ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் சிவக்குமார் மணிகண்டன் செந்தூரப் பாண்டியன் சங்கரலிங்கம் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify