- வரும் 27/02/2022 அன்று திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்.
- 916 இடங்களில் நடைபெற உள்ள இந்த முகாம் மூலம் 135174 குழந்தைகள் பயனடைவார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு வரும் 27/02/2022 அன்று போலியோ சொட்டு மருந்து வழங்குவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் வருகிற ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளதாகவும், இதன் மூலம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 174 குழந்தைகள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் இதற்காக கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், புறவழிச்சாலைகள், சுங்கச்சாவடிகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 918 முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், விடுபட்ட குழந்தைகளுக்கு பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துக்கொண்ட அவர், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ மருந்து செலுத்திக்கொள்ளும் படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.