- திருநெல்வேலியில் “பொருநை நெல்லை புத்தக திருவிழா 2022” துவங்க உள்ளது.
- 10 சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை.
திருநெல்வேலியில் வருகிற 18/03/2022 தேதி முதல் 22 /03/2022 தேதி வரை மாவட்ட நிர்வாகம் சார்பாக பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் புத்தகத்திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.
தாமிரபரணி நதியின் பெருமையை எடுத்துக்கூறும் வகையில் “பொருநை நெல்லை புத்தக திருவிழா 2022” என்ற பெயரில் நடைபெற உள்ள இந்த விழாவில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்க உள்ளார்கள். இங்கு கலை, இலக்கியம், சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றத்துக்கான புத்தகங்கள் அரசு துறைகளில் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டும் புத்தகங்கள் போன்ற பல லட்சக்கணக்கான புத்தகங்கள் ஒரே இடத்தில், 10 சதவீதம் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்தினை எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், “நெல்லையில் நீர்வளம், தூய பொருநை நெல்லைக்கு பெருமை” என்ற தலைப்பில் அரங்குகள் அமைக்கவும், பல்வேறு கருத்தரங்குகள் நடத்தவும், நாட்டுப்புற கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாடு ஆகியவற்றை விளக்கும் வகையில் தலைசிறந்த பேச்சாளர்களின் சிறப்புரைகளும் நாள்தோறும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image source: dailythanthi.com