செய்தி குறிப்புகள் :
- கேரளாவிலிருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு அரசு பஸ் இயக்கம் கேரள போக்குவரத்து கழகம் அறிவிப்பு
- புதிய பஸ் இயக்கத்தால் கேரளா ஆத்தங்கரை பள்ளிவாசல் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி.
தென்றல் சுற்றிலும் சுதந்திரமாய் வீச ஓடும் பஸ்ஸில் ஓரத்தில் அமர்ந்து மூச்சு திணற வைக்கும் காற்றுதனை நுகர்ந்து செல்லும் பயண சுகமே தனிசுகம் தான் .
அப்படி பஸ் பயண வசதி இல்லாமல் கிராமங்கள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தக் கவலை தீரும் பொருட்டு கேரளாவில் இருந்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு அரசு பஸ் இயக்கம்
திருநெல்வேலி திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளி வாசலுக்கு கேரள போக்குவரத்து கழகம் சார்பில் பஸ் விடப்பட்டுள்ளது
இந்த பஸ் கேரள மாநிலம் ஹரிப்பாடு என்ற இடத்தில் இன்று அதிகாலை 5 .20 மணிக்கு புறப்பட்டு கொல்லம், கலியக்கவிலை நாகர்கோவில், திருவனந்தபுரம், தக்கலை , கூடங்குளம் வழியாக மதியம் 12. 10 மணிக்கு ஆத்தங்கரை பள்ளி வாசலுக்கு வந்து அடைகிறது.
ஆத்தங்கரை பள்ளிவாசலில் இருந்து மாலை 3 .10 மணிக்கு புறப்பட்டு இரவு 9.55 மணிக்கு ஹரிபாடு சென்றடைகிறது இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அளித்துள்ளது.