தென்காசி மாவட்டம், ஆவுடையானூரில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று (11/02/2022) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை ஊராட்சித் தலைவர் அவர்கள் காலை 10.00 மணிக்கு துவங்கி வைக்க உள்ளார். இதில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.காம், எம்.காம், பொறியியல் பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்குபெற்று பணியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.